cinema news
கோவையில் இசைஞானியின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
இசைஞானி இளையராஜா ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முன்னணி நகரங்களில் பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில வருடங்களில் இசை நிகழ்ச்சியே நடத்தாமல் இருந்தார்.
இப்போது 10 வருடங்களுக்கும் மேலாக பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 ல் வருகிறது. அன்று இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ஆகும். கோவை கொடீசியா வளாகத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் மனோ, கார்த்திக், உஷா உதூப்,யுகேந்திரன், ஸ்வேதா, விபாவரி ஆப்தே, ப்ரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்டோர் பாடுகின்றனர்.இதற்கான டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு வருகின்றன.