cinema news
டான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், போன்றோர் நடித்துள்ளனர்.
சிபிச்சக்கரவர்த்தி இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை பார்த்த அனைவருமே பாராட்டுகின்றனர். முதல் பாதி மிக ஜாலியாக இருந்ததாகவும் இரண்டாம் பாதியில் ரொம்பவும் கண் கலங்க வைத்ததாகவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் சூப்பர் படத்தின் கடைசி 30 நிமிடம் கண்கலங்க வைத்தது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.