Published
11 months agoon
பிரபல நடிகர் மனோபாலா. இவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ஆரம்பத்தில் சில படங்களை இவர் இயக்கினாலும் அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை.
அந்த நேரங்களில் சில கதைகளை வைத்துக்கொண்டு பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் மனோபாலா கதை சொல்ல, மனோபாலாவை ஒரு இயக்குனராக மதிக்கவே இல்லையாம் அவர்.
அதன் பிறகு ஒரு வழியாக கஷ்டப்பட்டு பிள்ளை நிலா படத்தை இயக்கி அதன் பிறகு சிறைப்பறவை, ஊர்க்காவலன் என பல படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் பாம்குரோவ் ஹோட்டலில் இருந்த மனோபாலாவை பார்க்க அந்த தயாரிப்பாளர் வந்துள்ளார். எனக்கு ஒரு படம் செய்து கொடுங்க என அவர் கேட்டுள்ளார். ஆனால் முடியாது என மறுத்து விட்டாராம் மனோபாலா. அந்த தயாரிப்பாளர் வேறு யாருமல்ல கமல்ஹாசனை வைத்து 16 வயதினிலே, மகாநதி படங்களை தயாரித்த எஸ்.ஏ ராஜ்கண்ணுதான் அவர் வேறு யாருமல்ல இந்த ரகசியத்தை இப்போதான் சொல்றேன் என மனோபாலா கூறியுள்ளார்.