Connect with us

நீங்காத சோகம் நெஞ்சுக்குள்ளே…ஆனந்த ராகம் தான் உதட்டிலே…80தை கடக்கும் இளையராஜா!…

ilayaraja

cinema news

நீங்காத சோகம் நெஞ்சுக்குள்ளே…ஆனந்த ராகம் தான் உதட்டிலே…80தை கடக்கும் இளையராஜா!…

இளையராஜா தமிழ் சினிமாவின் மூலம் இசை உலகிற்கு  கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இவரது இசைக்கு மயங்காத காதுகளே கிடையாது என அடித்துச்சொல்லலாம்.

 

“அன்னக்கிளி” படத்திலிருந்து இசை வானில் பறக்கத்துவங்கியது இந்த இசைப்பறவை. காலாத்தால் அழிக்க முடியாத கானங்களை காற்றில் கலக்க வைத்து காதுகளை குளிர வைத்தவர் இவர்.

காதல் பாடல்கள் என்றால் இவருடையது தான். சோகப்பாடல்கள் என்றாலும் இவருடையது. போட்டிப்பாடல்கள் கூட இவருடையது தான். இப்படி இசை ரசிகர்களின் மனதை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் இளையராஜா. படத்தில் சரக்கு இல்லாவிட்டாலும் இவரது பாடல்களுக்காகவே ஓடிய படங்களின் எண்ணிக்கை ஏராளம்.

ரஜினிகாந்த் கூட ஒருமுறை மேடையில் பேசும் போது தனது படங்களுக்கும் இவர் கொடுத்த பாடல்களை விட கமல்ஹாசனுக்கே அதிகமான ஹிட் பாடல்கள் கொடுத்தார் என ஆதங்கப்பட்டிருப்பார். ராமராஜன் வெள்ளி விழா நாயகனாக வலம் வரக்காரணம் இவரது இசயும் கூடத்தான். ராமாராஜனுமே  இதனை ஒப்புக்கொண்டு தனது வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜாவே என சொல்லியுமிருந்தார்.

ஜுன் மாதம் 3ம் தேதி நாளை இளையராஜாவுக்கு பிறந்த தினமாக இருந்தபோதும், இன்றே தனது ரசிகர்களை சந்தித்தி வாழ்த்துக்களை பெற்றார்.

ilayaraja bavatharini

ilayaraja bhavatharini

தொடர்ந்து பேசிய இளையராஜா இந்த ஆண்டு தனது பிறந்த தினத்தை கொண்டாடுவதில் தனக்கு விருப்பமில்லை என சொன்னார்.

இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரனி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.அந்த துக்கம் இன்னும் தன்னை விட்டு மறையவில்லை.

ஆனாலும் அதற்காக தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்ற விருப்பமில்லை என்றும். அதனால் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் தான் தலையிடவில்லை என உருக்கமாக பேசி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

More in cinema news

To Top