Entertainment
தடுமாறி விட்டாரா தாத்தா?…எஸ்கேப்பான அனிரூத்…கழுவி கழுவி ஊத்திய ரசிகர்கள்…
பெரிய எதிர்பார்ப்போடு இன்று காலை வெளியானது “இந்தியன் – 2”. 1996ம் ஆண்டில் வெளியான “இந்தியன்” முதல் பாகத்தில் ஷங்கர் – கமல் காம்போ கலக்கியிருந்தது. இதில். ஏ.ஆர்.ரகுமான் இசையும், சுஜாதாவின் வசனமும், கமலின் மேக்-கப் கெட்டப் “இந்தியன்” முதல் பாகத்தை வேற லெவல் ஹிட்டாகியது. லஞ்சம், ஊழலுக்கு எதிரான யுத்தத்தை சில்வர் ஸ்கிரீனில் நடத்தி காட்டியிருந்தார் ஷங்கர்.
“விக்ரம்” படத்தின் மூலம் லை-ஃப் டைம் கம்பேக் கொடுத்தார் கமல். அதன் பின்னர் ஷங்கர் – கமல் காம்பினேஷனில் ஹையஸ்ட் எக்ஸ்பெக்டேஷனோடு வெளிவந்தது “இந்தியன் – 2”. படத்தின் ஆடியோ லாஞ்சாக இருக்கட்டும், டிரையலர் ரிலீஸாக இருக்கட்டும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவே இருந்தது. படமும் இதே டெம்போவில் தான் இருக்கும் என்ற கற்பனையோடு தியேட்டருக்கு சென்றவர்களுக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி.
படத்தை பார்த்து வந்த ஃபேன்ஸ்கள் கழுவி, கழுவி ஊத்தி வருகிறார்கள் யூ-டியூப் சேன்ல்களில் கொடுத்த கமென்ட்ஸில். தாத்தா வராரு பாடல் வெளியானதும் அனிரூத்திற்கு லைஃப் டைம் நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்து. ஆனால் படத்தை பார்த்து விட்டு மேக்-கப், ஸ்கிரீன் ப்ளே எல்லாத்திலும் ஓட்டை இருப்பதாக கமென்ட்ஸ் கொடுத்துள்ளனர் ஆடியன்ஸ்.
மியூசிக் மட்டும் தான் சொதப்பலாக இருக்கும்ன்னு சொல்லி விடுவார்களோ என அனிரூத் பயந்திருந்தால் எல்லாமே ஓட்டை தான் நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன்னு அனிரூத்தை நிம்மதி பெருமூச்சை விட வைத்து விட்டார் ஷங்கர். மிகப்பெரிய செட்-பேக்காக சொல்லப்படுவது படத்தின் லென்த். மூனு மணி நேரம் மூச்சு திணற விட்டுட்டாங்களாம் “இந்தியன் – 2” கிரியேசன் டீம்.
எதிர்பார்ப்போடு படத்தை பார்க்க வந்தவர்கள் பலர் நெகட்டிவ் கமென்ட்ஸ்களை மட்டுமே கொடுத்துள்ளனர். சொல்லும் படியாக இருப்பது சித்தார்த், பாபி சிம்ஹாவின் கேரடக்டர்ஸ் மட்டும் தானாம். “இந்தியன்” ஃப்ர்ஸ்ட் பார்டில் இசையமைத்த ஏ.ஆர். ரகுமானை ரொம்ப மிஸ் பண்றோம்ன்னு சொல்லிவிட்டனர் “இந்தியன் – 2” படத்தை பார்த்த வியூவர்ஸ்.
இன்னொரு ஆறுதலான விஷயமாக சொல்லப்படுவது “இந்தியன் -3” சம்பதப்பட்ட சீன்ஸ் படத்தில் வருவதும், அதில் நடிக்கும் கமலின் லுக்குமாம். தாத்தா எப்போ வருவாருன்னு காத்திருந்தவர்கள் முன்னால் நிலை தடுமாறி விழுந்து விட்டார் “இந்தியன் – 2” தாத்தா.