ரஜினி, கமல் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி தொழில் ரீதியாக இருந்து வரத்தான் செய்கிறது. கமல் படங்களில் சின்ன, சின்ன கேரட்க்டர்களில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கினார் ரஜினி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எதிர்பார்த்தை விட அதிக ஹிட் ஆனது.
ரஜினியின் வளர்ச்சி மீது அக்கறை காட்டிய கமல், தன்னுடனான கூட்டணியை முறித்து விட்டு தனிப்பட்ட முறையில் நடிக்க ரஜினியை வற்புறுத்தி இருக்கிறார். அதன் விளைவாக ரஜினி கதாநாயகனாக நடிக்கத்துவங்கினார். தன்னால் கமல் மாதிரி வர முடியுமா? என ரஜினி ஸ்ரீதேவியிடம் கேட்டதும் இருந்துள்ளது ஒரு காலத்தில்.

ரஜினியின் அசுர வளர்ச்சி கமலை கூட சந்தோஷப்பட வைத்திருக்கும். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை ஆளும் நாயகர்களாக மாறி வந்த நேரத்தில் இவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது படத்தில் வந்த பாடல்கள். இதில் அதிகம் இளையராஜா இசையமைத்ததாகத்தான் இருந்தது.
இதில் ரஜினிக்கு இப்போது வரை தன் படங்களை விட கமலின் படத்திற்கு தான் இளையராஜா நல்ல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார் என்ற ஆதங்கம் இருந்து வருகிறதாம்.
அவர் வீடியோ காலில் இதை பற்றி பேசுவது போன்ற வீடியோ பரவி வருகிறது. அதில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘ராமன் ஆண்டாளும்’ மாதிரியான நல்ல பாடல்களை இசையமைத்து கொடுத்திருந்தார்.
ஆனால் “தேவர் மகன்”, “நாயகன்” பட பாடல்கள் மாதிரி மிக அருமையான பாடல்களை தனக்கு போடவில்லையே என தனது மனக்குறையை சொல்லியிருக்கிறார். ரஜினியின் சொல்படி பார்த்தால் இளையராஜா ரஜினிக்கு பாரபட்சம் காட்டிவிட்டாரா என நினைக்க வைத்து விட்டார் தானே?.











