cinema news
அதெல்லாம் நாங்க ஏற்கனவே செஞ்சாச்சு….வேற இடம் பாருங்க ராஜா!…பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்?…
இளையராஜாவின் பாடல்கள் எவ்வளவு மென்மையானதோ அதற்கு நேர் எதிர்மாறாகத்தான் அவரது வார்த்திகள் சிலரின் காதுகளில் ஒலித்துவிடுகிறது. அதில் பிறந்துவிடும் சர்ச்சை, சில நாட்கள் அதன் மீதே ரசிகர்களின் கவணம் இதன் மீதே. இப்படியே படங்களுக்கு இசையமைப்பது குறைந்தாலும் இளையராஜாவின் வாழ்க்கை சக்கரம் இப்படித்தான் உருளுகிறது இப்போது.
தன்னை கேட்காமல் தனது பாடலை பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து கருத்து சொல்லிவருகிறார் இளையராஜா. அதோடு மட்டுமல்லாமல் தனது பாடலை படங்களில் இடம்பெறச்செய்யும் தயாரிப்பளர்களுக்கு நோட்டீஸ். இதுவும் தொடர்ந்து வரும் நிகழ்வுதான் இவரது திரைப்பயணத்தில்.
சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியதற்கு தன்னிடம் அனுமதி கோரவில்லை என நோட்டீஸ் கூலி பட தயாரி[ப்பளருக்கு அனுப்பியது போலவே. மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் ஷான் ஆன்டனி இரண்டு தயாரிப்பு நிறுவனங்களிடம் பாடலுக்கு அனுமதி வாங்கிய பிறகே தான் பயன்படுத்தினேன் என பதில் சொல்லி இருக்கிறார்.
ஒரு மொழி உரிமை ஒரு நிறுவனத்திடமும், பிற மொழிகளின் உரிமை மற்றொரு நிறுவனத்திடமும் என இருவரின் சம்மதம் கிடைத்த பிறகே பாடல் சேர்க்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளாராம்.
பிரபலங்கள் பலரும் பட சார்ந்த அனைத்து உரிமையும் தயாரிப்பாளருக்கே சொந்தம் என சொல்லி வர அதே போல தான் இந்த தயாரிப்பாளரும் சொல்லியிருக்கிறார்.
இப்படி சட்டத்தின் படி நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் முறைப்படியும், சரியாகவும் செய்து விட்ட பிறகு எதற்கு இளையராஜாவின் நோட்டீஸை கண்டு பயப்பட வேண்டும் என்பது போலவே சொல்லியிருக்கிறார்.