Connect with us

இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை

Latest News

இலங்கையை போல் ஆன பாகிஸ்தான் நிலைமை

இலங்கை, பாகிஸ்தான் போன்ற சின்ன நாடுகளை தங்கள் அரவணைப்பில் நீண்ட நாட்களாக வைத்திருந்தது சீனா. உலகத்தில் பல பெரிய  நாடுகளோடு ஒற்றுமையோடு இல்லாமல் இருக்கும் சீனா பல சின்ன நாடுகளை கைக்குள் வைத்துக்கொண்டது.

குறிப்பாக இந்தியாவோடு பரம எதிரியாகவே இருந்து வரும் சீனா, இந்தியாவின் முக்கிய எதிரியான பாகிஸ்தானை தன் கைக்குள் வைத்துக்கொண்டது. இந்தியாவிடம் நட்பு பாராட்டும் மற்றொரு அண்டை நாடான இலங்கையையும் நட்பாக வைத்துக்கொண்டது.

இலங்கையில் சீனர்களின் ஆக்ரமிப்பை அதிகப்படுத்தி, அங்கு துறைமுகம் போன்றவற்றை கட்டி இந்தியாவின் கடல் வழி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதற்காக தனது நட்பு நாடுகளுக்கு கடன் என்ற பெயரில் சீனா கொடுத்தது ஏராளம். அந்த கடனை எல்லாம் வாங்கி விட்டு வடிவேலு சொல்வது போல குண்டக்க மண்டக்க இலங்கையின் நிலைமை ஆகி,இன்று பொருளாதாரத்தில் மிக மோசமாய் போய்விட்டது.

எல்லா பொருட்களும் விலை தாறுமாறாய் ஏறி விட்டது. தாறுமாறாய் ஏறினாலும் பொருட்களும் கிடைக்கவில்லை. அதே நிலைமை பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சில தினங்கள் முன் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  உனக்காகத்தான் இவ்வளவு நாள்- கர்ப்பம் குறித்த நமீதாவின் பதிவு

More in Latest News

To Top