cinema news
ஆ…வை வைத்து அசத்திய இளையராஜா!…ஓரே வார்த்தையில் இத்தனை பாடல்களா?…
பாடல்கள் என்பது திரைப்படத்தில் பெயருக்காக மட்டுமே வைக்கப்படுபவை அல்ல. அந்த சிட்டுவேஷனை ரசிகர்களுக்கு எடுத்துச்சொல்வதே பாடல்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். சூழ்நிலையை சரியாக சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களே வெற்றி பெற்றிருக்கிறது.
வரிகள் எவ்வளவு முக்கியமோ அதே போல தான் மெட்டும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தே வருகிறது. இசையை சரியாக அமைக்கும் இசையமைப்பாளர்களின் பாடல்களே காலம் கடந்தும் பேசப்படும்.
இதில் இளையராஜாவின் இசைக்கும் அதில் வெளியான பாடல்களுக்கும் ஒரு தனித்துவம் இருப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.
தமிழ் மொழி உயிர் எழுத்தின் இரண்டாவது வார்த்தையான ‘ஆ’ வை கொண்டு இளையராஜா தனது பாடல்களை துவக்கியிருப்பார். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலின் துவக்கம் “ஆ”விலிருந்த தான் இருக்கும்.
“இதயக்கோவில்” படத்தின் ‘இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்’, ‘வானுயர்ந்த சோலையிலே’ இந்த பாடல்களின் இசை ‘ஆ’ விலிருந்தே துவங்கும்.
“தம்பிக்கு எந்த ஊரு” பட ‘காதலின் தீபமொன்று’, “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’ , ‘மேகம் கருக்கையிலே’ பாடல்களின் துவக்கமும் ‘ஆ’ என்றே தான் இருக்கும்.
பாரதிராஜா இயக்கி சிவாஜி, ராதா நடித்த ‘முதல் மரியாதை’ படத்தின் ‘ராசாவே உன்ன நம்பி’, “நாயகன்” படத்தின் ‘தென் பாண்டி சீமையிலே’ பாடலும் ‘ஆ’ வை வைத்தே துவங்கும்.
மோகன், கார்த்திக், ரேவதி நடித்து மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் வரும் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘நிலாவே வா’ பாடல்களின் துவத்தையும் ‘ஆ’ வார்த்தையை கொண்டே துவக்கியிருப்பார் இளையராஜா.