- Homepage
- Entertainment
- அடுத்தடுத்து ரெக்கார்ட்…அசர வைக்கும் இந்திய கிரிக்கெட் அணி…
அடுத்தடுத்து ரெக்கார்ட்…அசர வைக்கும் இந்திய கிரிக்கெட் அணி…
இறுதிப் போட்டிகளில் கோப்பையை வெல்லும் என அந்நிய தேசத்தினராலும் கூட அதிகம் எதிர்பார்க்கடும் கிரிக்கெட் அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு எதிர் அணிகளின் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு வீரரும் அதிக சிரமத்தை எடுத்தே வருகின்றனர். முன்பு எல்லாம் சில போட்டிகளின் முடிவுகளை எளிதாக கணித்து விடலாம். ஆனால் இன்றைய நிலையோ அப்படி அல்ல என்றே தான் சொல்லி ஆக வேண்டும்.
இப்படி வெற்றி கடினம் அதிக உழைப்பை போட்டே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்த வரை. அதிக எதிர்பார்ப்புகளோடு களமிறங்கிய இந்திய அணி இதற்கு முன்னர் பல இறுதிப் போட்டிகளில் சறுக்கல்களையே சந்தித்து வந்தது.
இந்தியாவில் வைத்து நடைபெற்ற ஐம்பது ஓவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டி வரை. சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி.
இதே போல தான் இங்கிலாந்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் லெஜன்ட்ஸ் போட்டியிலும் இந்திய சாம்பியன்ஸ் அணி வென்று வாகை சூடியது. இப்படி சில நாட்களாக அடுக்கடுக்கான சாதனைகளை செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.
தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீரர் சுப்மான் கில். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது.
முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த இந்திய அணி அடுத்த நான்கு போட்டிகளிலும் அதிரடி காட்டி வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இதுவரை இரு நாடுகளுக்கு இடையேயான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்களில் தொடர்ச்சியாக நான் கு போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மான் கில்.
பல நாடுகள் பங்கேற்ற இருபது ஓவர் உலக்கோப்பை போட்டியில் தான்விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியே அடையாமல் வெற்றி பெற வைத்து சாதனை படைத்திருந்தார் இந்திய இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா.