Tamil Flash News
அந்த வெறி தான் இளையராஜாவ இசைஞானி ஆக வச்சது!…தியாகராஜன் சொன்ன திடுக் தகவல்…
இசையமைப்பாளர்கள் பாடல் வரிகளுக்கு டியூன் கம்போஸ் செய்து கொடுத்த பிறகே தான் பாடல் ஒலிப்பதிவு நடக்கும். கம்போசிங்கிற்கும், ரெக்கார்டிங்கிற்கும் நடுவே கிடைக்கும் நேரங்களில் இளையராஜா தனது கித்தாரை கையில் எடுத்துக் கொண்டு, அந்த சிட்டுவேஷனுக்கு அவரே ஒரு மெட்டினை போட்டு யோசித்து தனியாக மெட்டு அமைத்துக் கொண்டிருப்பாராம். அப்பொழுது அவர் இசையமைப்பாளர்களிடம் இடம் உதவியாளராக பணிபுரிந்த நேரமாம் அது.
1972 ஆம் ஆண்டு நடத்த இந்த சம்பவத்தை தியாகராஜன் நினைவு கூறி இருக்கிறார். சினிமா துறையை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரத்தை கவனிக்க சென்று விட்டதாகவும்.
வியாபாரம் சீரான பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்பை ஏற்படுத்தி, அதன் பின்னர் இளையராஜாவை பார்க்கும் போது அவர் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய இசையமைப்பாளராக மாறி இருந்தாராம்.
உதவியாளராக இருக்கும்பொழுது இளையராஜாவுக்கு தான் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்கின்ற ஒரு வெறி இருந்ததாகவும், அந்த விடாமுயற்சியும் உழைப்புமே இளையராஜாவை மிகப் பெரிய இடத்துக்கு கொண்டு சென்றதாக தியாகராஜன் பெருமையுடன் பேசி இருப்பார்.
அது மட்டுமல்லாமல் இளையராஜா தனது குடும்பத்துக்கே மிகவும் நெருக்கமானவர் என்றும். வருடா வருடம் இளையராஜாவினுடைய பிறந்தநாள் தனது இல்லத்தில் வைத்து தான் கொண்டாடப்படும் என்றும் மகிழ்ச்சியோடு சொல்லி இருந்தார். சினிமாவையும் தாண்டி தனக்கும் இளையராஜாவிற்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கம் உண்டு என்றும் சொல்லியிருந்தார். பாரதிராஜவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜன், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். அதன் பிறகு இருவரின் திரைப்பயண்மும் தொடர்ந்தது.