நடிகர் கமல்ஹாசன் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் விக்ரம்.இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் மலேசியாவில் நடந்தது.
மலேசியா சென்ற கமல் , அங்குள்ள சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார் அந்த சேனலில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சுவாரஸ்யமாக இருந்தது.
இப்போ உங்களுக்கு உள்ள சகல கலா வல்லவர் பட்டத்தை யாருக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விக்கு, அது கண்டிப்பாக அண்ணன் இசைஞானிக்குத்தான் கொடுப்பேன். அவர் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல பல வித்தைகள் தெரிந்தவர், நான் ஏதாவது ஒரு காட்சி சொல்லி அதற்குரிய மியூசிக் வேண்டும் என கேட்க தெரியாமல் திணறுவேன், அப்போ அவர் உங்களுக்கு என்ன வேணும்னு கேட்பார், அதற்கு நான், அண்ணே நீங்க ஒரு பீடியாட்ரிசியன் டாக்டர் மாதிரி நான் குழந்தை மாதிரி, எனக்கு என்ன வேணும் என்பதை சொல்ல தெரியாது. குழந்தை மருத்துவராகிய நீங்கதான் அதை புரிஞ்சுக்கணும் என்பார். உடனே அதற்கு ஏற்றவாறு இசையை கொடுப்பார்.
மேலும் படத்திற்கு சரியான தலைப்பை சொல்வார். அது உடனே ஏற்றுக்கொள்ளும்படியான தலைப்பாக இருக்கும்.காட்சியமைப்புகளை மாற்ற சொல்வார், உடனே சிச்சுவேஷனுக்கு ஏற்றபடி பாடலும் எழுதுவார் இப்படி பல சகலகலா வித்தைகள் தெரிந்த இசைஞானியே சகல கலா வல்லவன் என கமல் புகழாரம் சூட்டியுள்ளார்.