சுசித்ராவின் வீடியோவால் கோடம்பாக்கம் இரவிலும் கூட தூங்காமல் முழித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. அடுத்த வீடியோ எப்போ வரும் அதில் வேறு யார் பெயரும் சேர்க்கப்படுமா என்ற அச்சத்தோடு.
தனது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றிய பாடகி சுசித்ராவின் விடியோவில் அவரை ஓரினச்சேர்க்கை பிரியர் சொல்லியிருந்தார். அதோடு மல்லாமல் இந்த விவகாரத்தில் ஒரு குழுவாக இருந்து செயல்படுகிறார்கள் எனவும் பேசி பீதியை கிளப்பி விட்டிருக்கிறார். சுசித்ரா பற்றிய பேச்சுக்கள் தான் இப்போது வலைதளத்தில் அதிகமாக வலம் வருகிறது.
அவர் குறிப்பிட்ட பெயர்களில் இதுவரை யாருமே எதிர்வினை ஆற்றாத நிலையில் களத்தில் குதித்துள்ளார் கார்த்திக். தனது முன்னாள் மனைவி சொல்லியது போல தான்கேயாக இருந்தால் அதனை தானே வெளிப்படையாக சொல்லியிருப்பேன். அது குறித்த விடியோவையும் வெளியிட்டிருப்பேன் என கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.
![karthik suchitra](https://i0.wp.com/tamilnaduflashnews.com/wp-content/uploads/2024/05/karthik-suchitra.jpg?resize=1000%2C573&ssl=1)
சுசித்ரா சொன்னதையெல்லாம் கேட்டு விட்டு அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் இதனை வெளியிட்ட யூ-டியூப் நிறுவனம் அந்த விடியோவை தங்கள் பக்கத்திலிருந்து டெலிட் செய்ய வேண்டும். அதே போலே சுசித்ரா தனது பேச்சிற்கு மண்ணிப்பு கோராவிட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்டுள்ளதாக சுசித்ரா குற்றம் சாட்டியுள்ள மற்ற நபர்கள் எல்லாம் ஏன் இந்த விஷயம் குறித்து பேசாமலேயே மெளனம் காத்து வருகின்றனர் என்பது இந்த நிமிடம் வரை புரியாத புதிராகவே இருக்கிறது என பேச்சுக்கள் எழத்துவங்கியுள்ளது. அதே நேரத்தில் கார்த்திக் மட்டும் ஏன் இந்த விஷயத்தில் திடீர் வேகம் எடுத்து தீவிரம் காட்டத்துவங்கியுள்ளார் என்பதுவும் புதிராகவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.