cinema news
நடிப்பு எனக்கு பேர் வாங்கி தரவில்லை!…எல்லாமே என் நடவடிக்கைகளால் தான்… ஜெய்சங்கர் சொன்ன ரகசியம்?…
தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இவர் துப்பறியும் கதைகளில் அதிகமாக நடித்து வந்தார். காதல் ரசம் சொட்டும் காட்சிகளிலுமே இவர் அதிகமாக நடித்திருந்தாலும், இவருக்கு சண்டை காட்சிகள் கொண்ட படங்களே அதிகமாக எடுபட்டது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர் முக்கிய கதா நாயகர்களுடன் இணைந்தும், ஹீரோவாக தனியாகவும் நடித்திருக்கிறார்.
நாடகங்களில் நடித்த அனுபவத்தை கொண்டிருந்தவர் ஜெய்சங்கர். இங்கே இருந்து தான் ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்க வந்தவர்கள் பலரும் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு மிகப்பெரிய உதாரணாமாக சொல்லப்படக்கூடியவர்.
இப்படி நாடகக்கலையை கற்று அங்கிருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்களில் ஒருவர் ஜெய்சங்கர். துவக்கத்தில் நாடகத்தில் வசனங்களை பேசுவது போலே தான் சினிமாவில் பேசி வந்தாராம். நாடகத்தில் வசனங்களை நேரடியாக மக்கள் முன்னாடியே பேச வேண்டும் என்ற காரணத்தினால் அதிகமான சத்தத்தோடு பேச வேண்டியது இருக்கும்.
அதே பழக்கம் தான் அவரை அறியாமல் வெள்ளித்திரையிலும் துவக்கத்தில் இருந்து வந்ததாம். அதை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்ட அவர், தன்னுடைய நடிப்பு தனக்கு அதிகமான பெயரை வாங்கித் தரவில்லை என்றாலும் உடல் அசைவு, வசனங்கள் ஒரு உச்சரிப்பது போன்ற நடவடிக்கைகளே அவரை இந்த அளவு உயரத்திற்கு கொண்டுசென்றதாக என அவரே ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
ரஜினி, கமல் உட்பட பலருடனும் நடித்திருந்த அனுபவம் கொண்ட இவர், பின்னாட்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத்துவங்கினார். குறிப்பாக எல்லோரையும் விட ரஜினியுடன் தான் இவர் அதிகமான படங்களில் நடித்திருந்தார்.