legend
legend

லெஜென்ட் சரவணன் ஆன் தி வே!…அதிர வைக்கப்போற அண்ணாச்சி!…அடுத்த படம் ரெடியா?…

“லெஜென்ட்”  படத்தின் மூலம் புயலாக தமிழ் சினிமாவில் அறிமுகமகி ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்தவர சரவணன். அவரது பெயரே ‘லெஜென்ட்’ சரவணன் என மாறும் அலவில் தான் இருந்தது இந்த படம். லெஜென்ட் படத்தில் மட்டும் தான் இவர் நடித்திருக்கிறார் இவர் இன்று வரை.

தனது வியாபார நிறுவனத்தின் மூலம் கிடைத்த புகழைக்கொண்டும், தன் மீது உள்ள நம்பிக்கையை கொண்டும் மட்டுமே திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் சரவணன். படம் ஆரம்பித்ததிலிருந்தே எல்லாமே பிரம்மாண்டம் தான். படத்தின் ஆடியோ லாஞ்சாக இருக்கட்டும், படத்திற்கான பட்ஜெட்டாக இருக்கட்டும் பின்னி எடுத்திருந்தார் அவர்.

legend saravanan
legend saravanan

ஜே.டி. ஜெர்ரி இயக்கிய “லெஜென்ட்” படத்தில் சரவணனுடம் கைகோர்த்திருந்தனர் தமிழ் சினிமாவின் பிரபலங்கள். பாலிவுட்டிலிருந்து பறந்து வந்தார் படத்தின் நாயகி ஊர்வசி ரௌதாலே. பிரபு, நாசர், மயில்சாமி, தம்பி ராமையா, கோவை சரளா என நட்சத்திர பட்டாளங்களுடன் தனது முதல் படியை சினிமாவில் எடுத்து வைத்தவர் சரவணன்.

இந்த அளவிலான மிகப்பெரிய பெயரினை ஒரே படத்தின் மூலமாக பெற்றதோடு மல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் விரைவில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக ‘வலைப்பேச்சு’அந்தணன் சொல்லியிருக்கிறார்.

“லெஜென்ட்” அண்ணாச்சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தான் அது என்றும். அதோடு பட பூஜைக்கான தேதியும் வெளி வர உள்ளதாக சொல்லியிருக்கிறார். அனேகமாக அடுத்த மாதம் இதனை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறதாம். எது எப்படியோ விரைவில் துவங்க இருக்கிறது சரவணன் ரசிகர்களின் ஆட்டமும், கொண்டாட்டமும்.