cinema news
மோதுறதுக்கு வடிவேலு தான் சரியான ஆளு!…ஓ இதுக்கு பேரு தான் ப்ளான் பண்ணி பண்றதா?….
வடிவேலு தமிழ் சினிமா கண்டெடுத்த தவிர்க்க முடியாத காமெடியன்.தனது பாடி லாங்குவேஜிலேயே சிரிப்பினை வரவழைத்து விடுவார். இவரோடு சிங்கமுத்து, ‘போண்டா’மணி, ‘அல்வா’வாசு இவர்களுடன் கூட்டணி அமைத்து தனது வேலையை காட்டத்துவங்கினார். இவர்கள் இணைந்த படங்களின் காமெடி சீன்கள் இன்றும் எங்கே பார்க்கபட்டாலும் நமது கண்கள் அதனை கவணிக்கத்தவறாது.
சிரிக்கவே கூடாது என வைராக்கியம் கொண்டிருந்தாலும் இவர்களின் நடிப்பு அதனை முறியடித்து விடும். இதில் சிங்கமுத்து – வடிவேலு இருவரும் அதிகம் உற்று நோக்கப்பட்டவர்கள். இருவருக்குமிடையே இப்போது மிகப்பெரிய சண்டை நடந்துவருவது ஊர் அறிந்தது தான். சிங்கமுத்து வடிவேலுவை பற்றி பேசும் போது நாங்கள் வசனங்களை கத்தி பேசித்தான் கவனத்தை ஈர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் வடிவேலுவோ தனது எக்ஸ்பிரசனிலேயே பதிலளிப்பாராம்.
கவுண்டமணி – செந்தில் இணை காமெடியில் கலக்கி உச்சத்தில் இருந்த நேரம் தான் வடிவேலு அறிமுகமானது. அவர்கள் இருவரும் புயல் மாதிரி வீசிக்கொண்டிருந்த வேளையில் கூட்டணி அமைத்து மோதுவதற்கு சரியான நபாராக இருந்தவர் வடிவேலு மட்டும் தான். அதுவரை சிறு, சிறு வேடங்கலை மட்டுமே ஏற்று நடித்து வந்த சிங்கமுத்து, வடிவேலு உடனான காம்பினேஷனுக்கு பிறகு தான் அவர் வேற லெவெலுக்கு சென்றார்.
வடிவேலுவை விட சினிமாவில் சீனியர் சிங்கமுத்து. ஆனாலும் வடிவேலு திறமையான நகைச்சுவை நடிகர் என்பதனை பல இடங்களில் நிரூபித்திருப்பார் என்றும் சிங்கமுத்து சொல்லியிருந்தார்.