cinema news
கரு பழனியப்பன் இயக்கும் ஆண்டவர்
பார்த்திபன் கனவு படம் மூலம் அறியப்பட்டவர் கரு.பழனியப்பன். ஒரு படத்தை மிக அழகியலாக எடுக்க கூடிய வித்தை தெரிந்தவர். சேரன் நடித்த பிரிவோம் சந்திப்போம். இவரே கதாநாயகனாக நடித்த மந்திர புன்னகை போன்ற படங்களை இயக்கியவர் இவர்.
சில வருடங்களாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த இவர் அரசியல், இலக்கியம், எழுத்துப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
டிவி விவாத நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆண்டவர் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.