நகைச்சுவை நடிகராகவே தனது வாழ் நாளின் இறுதி பகுதியை மாற்றிய மனோபாலா, இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனராக தான் எடுத்த முதல் படமே தோல்வியடைந்தாலும், தனது அடுத்த படத்தில் தவறுகளை சரிசெய்து மிக பெரிய வெற்றியை கொடுத்திருந்தார்.
“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் காட்சியாக்கப்படும் போது வருத்ததிற்குறிய ஒரு சம்பவம் ஒன்று நடந்து முடிந்ததாம். அந்த பாடலில் கார்த்திக், ராதா குளத்தண்ணீரில் இருந்து பாடுவது போல தான் காட்சியினை அமைப்பது தான் திட்டம்.

பாடல் வரிகளில் வருவது போல தாமரை மலர்களினிடையே இருவரும் இருக்க வேண்டும். அந்த மலர்கள் இவர்களை சுற்றுவது போல படமாக்க மனோ பாலா தண்ணீருக்குள் மூழ்கி மலர்கள் சுற்றிவரை செய்ய வேண்டுமாம். அதன் படியே அவரும் தண்ணீருக்குள் சென்றிருக்கிறார். வெளியே என்ன நடக்கிறது என்பதனை உணரமுடியாது மனோபாலாவால்.
இந்த நிலையில்தான் வெகு நேரம் தண்ணீருக்குள் மூச்சை பிடித்திருந்த மனோ பாலா தண்ணீருக்கு மேலே வந்த பின்பு தான் இந்த அதிர்ச்சி கலந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த காட்சியை பதிவாக்கி விட்டு படக்குழு வேறு இடத்திற்கு சென்று விட்டார்களாம். அட இப்படி ஆகிப்போச்சே என நினைத்து நொந்து போன மனோபாலாவும் அவருடன் தண்ணீருக்குள் முங்கியிருந்த மற்றொரு நபரும் பதறிபோய் படக்குழு எங்கே அடுத்து எங்கே நடந்து கொண்டிருக்கிறது என தேடி, தேடி சென்றார்களாம். அதோடு மட்டுமல்லாமல் காட்சி இயற்கையாய அமைய தண்ணீருக்குள் இருந்த தன்னை பற்றி எவருமே சிந்திக்க வில்லையே என வருத்தமும் பட்டிருந்தாராம் மனோ பாலா.