Latest News
5 நாட்களுக்கு பின் இன்று வழிபாட்டு தலங்கள் திறப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் ஓமிக்ரான் தொற்று விரைவாக பலருக்கும் பரவி வரும் நிலையில் கடும் பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த வார இறுதி நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் அடைக்க வேண்டும் என்ற விதிமுறையும் அமலுக்கு வந்தது.
மேலும் நேற்று வரை தைப்பூசம் வேறு இருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்ட பல வழிபாட்டுத்தலங்கள் நேற்று வரை அடைக்கப்பட்டது.
இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுகிறது வழக்கம்போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என தெரிகிறது.
