shalini rajini
shalini rajini

தலைவருக்கு தங்கையாக மாறவிருந்த தல மனைவி!…இது எப்போ நடக்க இருந்துச்சாம்?…

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி. குழந்தையாக நட்சத்திரமாக அறிமுகமான நேரத்தில் இவர் நடித்த விதமும் வசனங்களை பேசிய விதமும் அப்பொழுதே இவருக்கு ஒரு பெரிய மாஸ் உருவாகும் விதமாகத்தான் தனது திறமையை தமிழ் சினிமாவில் காட்டி வந்தார்.

கதாநாயகியாக விஜயுடன் நடித்த “காதலுக்கு மரியாதை “படம் வெளியான நேரத்தில் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவர்களுக்கு தெரியும் அதன் வெற்றி எப்படிப்பட்டததென. பிரஷாந்துடன் இவர் நடித்த “பிரியாத வரம் வேண்டும்” படத்தில் நட்பு எப்படி காதலாக மாறியது என்பதை சொன்ன விதம் தான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணாமாக அமைந்தது.

அஜீத்துடன் “அமர்க்களம்” படத்தில் பிறந்த காதலால் இருவரும் திருமணம் முடித்தனர். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷாலினி.

rajini sitharaa
rajini sitharaa

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன படம் “படையப்பா”. உலக அளவில் வெளியான முதல் தமிழ் படம் என்கின்ற பெருமையும் தன்னுள்ளே கொண்டுள்ள படம் இது. படையப்பாவவிற்கு முன்னர் வந்து வசூல் சாதனையை படைத்திருந்த இந்தியன் படத்தின் கலெக்ஶன் ரெகார்டை வீழ்த்தி, முதல் இடத்தை பிடித்த படம் இது.

ரஜினிக்கும், ரம்யாகிருஷ்ணனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரை மையமாக கொண்டே இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டது. ரஜினிக்கு தங்கையாக சித்தாரா படையப்பாவில் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் நடிக்க முதல் முதலாக ஷாலினியினுடைய பெயர் தான் பரிசளிக்கப்பட்டதாக ஆனால் அந்த நேரத்தில் ஷாலினியின் கால்ஷீட் கிடைப்பதில் இருந்த குளறுபடிகளின் காரணமாகவே சித்தாரா நடிக்க வைக்கப்பட்டாராம்.