Connect with us

கம்பேக் கொடுத்துட்டேன்…கைத்தட்டியவங்களுக்கு நன்றி சொன்ன ஹிப்-ஹாப் தமிழன்!

hiphop aathi

cinema news

கம்பேக் கொடுத்துட்டேன்…கைத்தட்டியவங்களுக்கு நன்றி சொன்ன ஹிப்-ஹாப் தமிழன்!

 

‘ஹிப்-ஹாப் தமிழன்’ஆதி இசையமைப்பாளராக வந்தவர் சினிமாவிற்குள். தெறிக்க விட்ட பாடல்கள் 2கே கிட்ஸை கவர இவரின் வளர்ச்சி மிக எளிதானதாக பார்க்கப்பட்டது. இசையமைப்போடு சேர்த்து கதாநாயகனாக படங்களில் என அடுத்த அத்தியாயத்தை தனது சினிமா வாழ்வில் எழுதத்துவக்கினார் ஆதி.

சில காரணங்களால் சிறிய இடைவேளை சினிமாவிலிருந்து, எங்கே இருக்கிறார் என தேட வைத்து விட்டார் ரசிகர்களை. “பி.டி.சார்” படத்தின் மூலம் கொடுத்துள்ளார் கம்-பேக். இந்த மாத இறுதியில் வெளிவர காத்திருக்கிறது படம் தயார் நிலையில். ஐசிரி கணேசன் ‘வேல்ஸ் இன்டர்னேஷனல்’ தயாரிப்பில் உருவகி உள்ளது படம்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற மேடையில் பளீச் புன்னகையோடே காணப்பட்டார் கதையின் நாயகன் ஆதி. நிகழ்ச்சியில் பேசிய அவர் நீண்ட இடைவேளிக்குப்பிறகு கதாநாயகனக மட்டுமே நடித்திருப்பதும், தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் கார்த்திக், தயாரிப்பாளர் ஐசிரி கணேசன் உள்பட எல்லோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

aathi

aathi

படப்பிடிப்பின் போது தனக்கு பிடித்தவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தது. தன்னால் என்றுமே இதனை மறக்க முடியாது என சொல்லியிருந்தார். படத்தில் ஆதியுடன் அனிகா, பாண்டியராஜன், தியாகராஜன், முனீஷ்காந்த் என பலரும் நடித்துள்ளனர்.

“நட்பே துணை”, “மீசைய முறுக்கு” படங்களின் கதாநாயகனான இவர் தனது பி.டி.சார் படம் குழந்தைகள், பெற்றோர் என அனைவரும் ரசிக்கும் விதத்திலே தான் எடுக்கப்பட்டுள்ளது என சொல்லியதோடு மட்டுமில்லாமல், எல்லா தரப்பு ரசிகர்களையும் பி.டி.சார்.படம் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என உறுதி படவும் பேசினார்.

More in cinema news

To Top