cinema news
சின்னத்தம்பி இப்படி ஓடும்னு எதிர்பார்க்கல. நான் பண்ணியது தப்பு தான்…தயாரிப்பாளர் சொன்ன தகவல்…
பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்thu வரலாறு காணாத வெற்றியை பெற்று வாகைசூடிய படம் “சின்னத்தம்பி”. படத்தினுடைய இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்களுமே. கவுண்டமணியின் நகைச்சுவையை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.
அண்ணன்-தங்கை பாசத்தை கதையாக கொண்டு, பல போரட்டங்களுக்கு பிறகு பாசம் எப்படி எல்லோரையும் வெற்றி பெறச்செய்தது என்பதனை மிகத்தெளிவாக காட்டிய படம் “சின்னத்தம்பி”. அப்பாவி கதாநாயகனாக பிரபு, கூண்டுக்கிளி குடும்ப பெண்ணாக குஷ்பூ.
காதல் என்றாலே என்ன வென்று தெரியாத பிரபு வின் மீது காதல், காதல் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என நினைத்த நாயகி யாருக்கும் தெரியாமல் நடத்திக்கொள்ளும் திருமணம் என் புது விதமான கதை அம்சத்தோடு வந்த படம் அது.
படதயாரிப்பாளராக பணியாற்றியவர் கே.பாலு. “சின்னத்தம்பி” படம் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என தான் எதிர்பார்க்கவில்லை. முதலில் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் கதையை பழிசொல்லி, பாட்டை கேட்டால் தூக்கம் வருகிறது என சொன்னார்களாம் தங்களது முதல் கருத்தாக.
அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி வெற்றி என்றால் இது தான் என சொல்ல வைத்தது “சின்னத்தம்பி” படம். வெளியான தியேட்டர்களில் எல்லாம் அபார வசூல். டிக்கெட் வாங்க நின்ற கூட்டத்தை வேடிக்கை பர்க்கவே மற்றொரு கூட்டம்.
இப்படி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல். வசூலை அள்ளி விளாசித்தள்ளியது. இப்படி ஒரு வரவேற்பை இந்த படம் பெறும் என்பது தனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்திருப்பேன் பாலு சொல்லியிருந்தார்.