vidyasagar vijay
vidyasagar vijay

ஒப்பனிங் சாங்ன்னா இப்படில்லா இருக்கனும்….வித்தை காட்டிய வித்யாசாகர்…

மாஸ் ஹீரோவா இருந்தாலும் சரி, வளர்ந்து வருகிறவராக இருந்தாலும் சரி அவர்கள் படங்களின் ஓப்பனிங் பாடல்கள் கூர்ந்து  கவணிக்கப்படும். அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் நாயகர்களின் கேரியரில்.

இதில் ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ், சிம்பு படங்கள் வெளிவரும்போது அவர்களின் அறிமுக காட்சிகளும், ஒப்பனிங் பாடலும் உற்சாகத்தை வரவைக்கும்.

இப்படி ஓப்பனிங் பாடல்களுக்கு என தனி மவுசு இருக்கும் நேரத்தில் வித்யாசாகர் தனது படங்களில் கொடுத்த ஹீரோ இன்ட்ரோ பாடல்கள் ரசிக்ககூடியவைகளாகத்தான் இருந்துள்ளது. “சிறுத்தை” படத்தில் கார்த்தி பாடும் படியாக வந்த ‘நா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல’ பாட்டு தியேட்டர்களை விசில் சத்தம் அலறவிட்டது.

vikram
vikram

“தூள்” படத்தில் “அருவா மீசை, கொடுவா பார்வை” பாடலை கேட்க, கேட்க நரம்புகள் முருக்கேறத்தான் செய்யும். சாக்லேட் பாயாக பார்க்கப்பட்ட மாதவனுக்கு “ரன்” படத்தில் இசையமைத்து கொடுத்த ‘தேரடி வீதியில் தேவதை வந்தால்.

விஜய் படம் என்றாலே பாட்டும், நடமும் என சொல்லக்கூடிய அளவிலான நபர் அவர். “மதுர” படத்தில் விஜய்காக வித்யாசாகர் இசையமைத்த ‘மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிஇதே போல விஜயின் மற்றொரு படமான சூரத்தேங்கா அட்றா,அட்றா பாட்டிற்கு ஆடாத கால்களும் தன்னை மறந்து ஆடத்துவங்கியது.

ரஜினி காந்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான சந்திரமுகி யில் இவர் இசையமைத்து கொடுத்த தேவுடா, தேவுடா பாடலும் கைத்தைட்டி ரசிக்க வைத்திருந்தது.