சினிமா என்றாலே இசை, கதை என ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவம் பெறத்தான் செய்யும். ரசிகர்கள் எது நடந்தால் திருப்தி அடைவார்கள். அவர்களின் ஆவல் எதனால் தூண்டப்படும் என்பதனை சரியாக தெரிந்து வைத்திருப்பவர்களே வெற்றியை தங்களது வசமாக்கி வீரநடை போட்டு வலம் வருவார்கள்.
நகைச்சுவை நடிகர்கள் என்றாலே சினிமாவில் முக்கியமானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த நிலையை அடைவதற்கு அவர்கள் எத்தனை கஷ்டங்களையோ கடந்து தான் வந்திருப்பார்கள்.
தமிழ் சினிமால் நடிக்க வருவதற்கு முன்னர் “வெண்ணிறஆடை” மூர்த்தி தன்னுடைய ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் சென்று ஆருடம் பார்த்துள்ளார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோசியரோ, நீ நடிகனாக மாறிவிடுவாய் என சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்னபோல மூர்த்திக்கு “வெண்ணிற ஆடை”படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அதே ஜோசியரை மீண்டும் சந்தித்து பலங்களை சொல்ல கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜோதிடரோ நீங்கள் வயதாகி, கைத்தடியின் உதவியோடு நடக்கும் காலம் வரை நீ சினிமாவில் தான் இருப்பீர்கள் என அடித்து சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இதிலே நீங்கள் நிறைய சம்பாதிப்பீர்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அதையெல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கன்ற மாதிரித்தான் வருங்காலம் அமையும் என அழுத்தமாக சொல்லி இருக்கிறாராம்.
அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் ஜோதிடராகவும் வருவீர்கள் எனவும் சொல்லியிருக்கிறார். அதன் பெயரிலேயே வெண்ணிறாடை மூர்த்தி தனக்கு ஆருடம் சொன்ன ஜோதிடருடைய புத்தகங்களை வாங்கி படித்து தான் ஜோதிடராக மாறியிருக்கிறார், ஜெயலலிதா போன்ற முக்கிய புள்ளிகளுக்கும் ஆருடம் சொல்லியிருக்கிறார்.