cinema news
போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு!! கமெண்ட் போட்ட ரசிகரையே கலாய்த்த ரசிகர்கள்
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.
இதனை தொடர்ந்து, தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியாவை அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் தான். பிக்பாஸ் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் லாஸ்லியா-கவின் காதல், சர்ச்சை மிகுந்த காதல் அவ்வளவு சுவாரசியமாக அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், கொரொனா 144 தடை உத்தரவு பிரபலங்கள் பலரை சோஷியல் மீடியாவில் மிகுவும் ஆக்டிவாக இருக்க செய்யதுள்ளது. அந்த வகையில், லாஸ்லியாவின் ரசிகர் ஒருவர் போட்ட கமெண்ட்டை (“நான் வெறித்தனமாக, உண்மையிலேயே, விஞ்ஞான ரீதியாக, வேதியியல் ரீதியாக, உடல் ரீதியாக, உண்மையாக கீழ்ப்படிந்து, அழகாக முற்றிலும் சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயமாக காதல் விட் யூ-தயவுசெய்து என்னை உன் சகோதரியாக ஏற்றுக்கொள்”) பார்த்த மற்ற சில ரசிகர்கள் இவ பொண்ணா இல்லனா பையனா? போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு!! என்று கலாய்த்துள்ளனர்.