மீண்டும் கதறி அழும் லாஸ்லியா ; காரணம் என்ன தெரியுமா? : வீடியோ பாருங்க

211
losliya

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா மீண்டும் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களை குஷிபடுத்தும் விதமாக தினமும் புதிய விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இன்று தர்ஷனும், கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களை கண்டதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைவதும், லாஸ்லியா கவினை காதலுடன் பார்க்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், வீடியோ கால் மூலம் தன் தந்தையுடன் பேசும் லாஸ்லியா, அப்பா என்னை தவறாக நினைக்காதீர்கள். நான் வெளியே வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன் என அவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், அப்போது அவர் கதறி அழும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?