”குவாரண்டின் அண்ட் சில்” பாடலை வெளியிட்ட மீசைய முறுக்கு நடிகர்

194

இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக முதன் முதலில் அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி.

இதனைத் தொடர்ந்து, இவர் நேற்று இன்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 ஆகிய படங்களில் இசையமைத்து இருந்தார். இதற்கிடையில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாகவும் களமிறங்கினார். மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில், கொரொனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த தருணத்தில், குவாரண்டின் அண்ட் சில் “Quarantine And Chill” என்ற காதல் பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடல், லிரிகள் வீடியோயுடன் யூடியூப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாருங்க:  மனைவி இருக்கும்போதே விளையாட்டு வீராங்கனையுடன் தொடர்பா? நடிகர் பதில்!