சீனாவில் பிறந்த கொரொனா, பின்பு பல நாடுகளை கடந்து இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மாநில அரசும், மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அதாவது 144 தடையை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால், நடுத்தர மக்கள் முதல் தின கூலிகள் வரை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உணவு பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துள்ளதை அடுத்து கொரொனா தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சியாக தன்னார்வலர்களுக்காக செய்து வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தன்னார்வலர்கள் தனியாக மக்களுக்கு பொருட்கள் வழங்க தடை விதித்துள்ளதாகவும், சமைத்த உணவுகள் நிவாரண பொருட்கள் இவற்றை வழங்கி வருவதால் தனிமனித இடைவெளி பாதிப்புக்குள்ளாகும் என்றும், இச்செயல்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி உள்ளதாகவும், இத்தகையான செயல்கள் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளது.
மேலும், தன்னார்வலர்கள் நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என்று தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.


