cinema news
லாஸ்லியா நீயும் அப்படிதானா? கடுப்பாகும் ரசிகர்கள்
தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி தொகுப்பாளர் லாஸ்லியா மரியனேசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினர். முக்கியமாக சகபோட்டியாளரான கவின் மீது கொண்ட காதலால் சர்ச்சையில் சிக்கி, பின்பு இவரின் தந்தையே நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்தது, பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்த எவராலும் மறக்கமுடியாது.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு என்றே சமூக வலைத்தளத்தில் ஆர்மி பட்டாளம் ஒன்று உள்ளது. இப்பொழுது இவரின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் ஒரு சில ரசிகர்கள் நீயும் அப்படிதானா? லாஸ்லியா. உனக்காக நாங்க ஆர்மி எல்லாம் வெச்சோமே என்று கடுப்பாகி பேசி உள்ளனர்.
ஆனால் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர், இது கண்டிப்பாக லாஸ்லியாவே கிடையாது என்று அடித்துச் சொல்கின்றனர். அந்த வீடியோ பதிவை உற்று நோக்கினால் அது லாஸ்லியாவாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகின்றது.