பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழ் மொழிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். எப்போதும் தனது சோசியல் மீடியாவில் தமிழிலேயே தனது பதிவை வெளியிடுவார். இவர் பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இவரை தொடர்ந்து நடிகர் அர்ஜுன், சதீஷ் மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க உள்ளனர். இந்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சிலர் படக்குழுவினரை மட்டுமல்லாது சதிஷுசையும் சேர்த்து கலாய்த்து உள்ளனர்.
https://www.instagram.com/p/B8tRDWypIlD/?utm_source=ig_embed&utm_campaign=loading
அதில் ரசிகர் ஒருவர், “இந்த படத்தில் இருப்பவர்கள் எல்லாமே மொக்க பீஸ் தான், படமே ஒரு மொக்க.. இவனுக்கெல்லாம் சிரிப்புனு எழுதி கொடுத்தா கூட சிரிக்க தெரியாது” என்றும் இன்னொரு ரசிகர், “இந்தியன் கிரிக்கெட் டீம்ல வேறுயாரான பாக்கி இருக்காங்களா?” என்று நக்கலாக நையாண்டி பண்ணி வருகிறார்கள்.
