atlee sankar
atlee sankar

என்னது அவரே சொல்லிட்டாரா?…விஜய் வாயாலே அட்லீ பெயரை சொல்ல வைத்த ஷங்கர்!…

ஒரு திரைப்படத்தின் மீது கவனம் செலுத்த  காரணமாக அமைவது அதனுடைய பெயருமே. அதிலும் அந்த படத்தின் கதாநாயாகனுக்கு கொடுகப்படும் பெயர் ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்கும். சில படங்கள் கதாநாயகர்களுக்கு திரைப்படத்தில் வழங்கப்பட்ட கதாப்பாத்திரத்தின் பெயரிலேயே படங்கள் வெளி வந்திருக்கிறது.

இந்த பார்முலா ‘சூப்பர் ஸ்டார்’ரஜினி காந்தின் படங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் கவனித்திருப்போம். “பாட்ஷா”, “முத்து”, “அருணாச்சலம்”, “பேட்ட” என படத்தில் வரும் அவரது கதாப்பத்திர பெயர்களே படத்தின் பெயராக இருந்திருக்கிறது.

ஆனால் படத்தில் வரும் மற்ற கேரக்டர்கள் அழைக்கப்பட்ட பெயர்களை நம்மில் அதிகமானோர் கூர்ந்து கவனிக்க தவறியிருக்கலாம். இயக்குனர் ஷங்கர் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனகளின் பெயர்களை சில கதாப்பாத்திரகளுக்கு வைப்பதை  பழக்கமாக கொண்டவர். பல படங்களில் இதை அவர் செய்திருந்ததை அறியாமல் நாம் கடந்து சென்றிருக்கலாம்.

“இந்தியன்” படத்தில் கமல்ஹாசன் நடித்திருக்க ஒரு காட்சியில் வீட்டின் முன்னே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் காந்தி கிருஷ்ணா என காட்டப்பட்டிருக்கும். ஷங்கரின் உதவி இயக்குனர்களில் ஒருவரின் பெயர் அது. “நிலாக்காலம்” , “செல்லமே”, “ஆனந்த தாண்டவம்” படங்களை பின்னாட்களில் இயக்கியவர் இவர்.

vijay
vijay

இன்று இந்திய திரை உலகை கலக்கி வரும் அட்லீ ஷங்கரிடம் பயின்றவர் என்பது தெரிந்ததே. விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய “நண்பன்”படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சிறுவனை பர்த்து இந்தா அட்லீ, இத ஆப்பரேட் பண்ணு என விஜயின் வாயாலாயே அட்லீ  பிரபலமாவதற்கு முன்னரே சொல்ல வைத்திருந்தார் ஷங்கர்

“முதல்வன்” படத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரியை அர்ஜூன் கேள்வி கேட்பது போல காட்சி வரும். அதில் வரும் அதிகாரி கதாப்பாதிரத்தின் பெயர் முத்து வடுகு. இந்த பெயரை கொண்ட வரும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்களில் ஒருவர். மேலும் இவர் இயக்குனர் பேரரசுவின் சகோதரருமாவார்.