‘சில்க்’ஸ்மிதா அன்றைய கால இளசுகள் மறந்திருக்க முடியாத பெயர் தான் இது. ரஜினி, கமல், பிரபு என பலரும் இவரது கால்ஷீட்டிற்காக காத்து நின்ற நேரமும் இருந்திருக்கிறது. கவர்ச்சியாக இருக்கும் ஒருவரை வர்ணிக்க பயன்படுத்தப்பட்ட உதாரணம் இந்த பெயரும் கூட.
கதாநாயகி ஆசையில் கோடம்பாக்கத்தில் கால் வைத்த இவரை வரவேற்று வாழ்வளித்தது கவர்ச்சி வேடங்கள் தான். ‘சில்க்’ நடித்திருக்கிறார் என தெரிந்தாலே போதும் தியேட்டரில் கூடிவிடும் கூட்டம். அவரது புகைப்படம் இருக்கும் போஸ்டர்களை கூட நின்று பார்த்து சென்ற கூட்டமும் இருந்து தான் இருக்கிறது ஒரு காலத்தில்.
“மூன்றாம் பிறை” படம் எப்படி கமல், ஸ்ரீதேவிக்கு முக்கியமானதாக அமைந்ததோ, அதனை போல் தான் ஸ்மிதாவிற்கும். வயதான தொழிலதிபரின் இளம் வயது மனைவியாக நடித்திருந்தார். தனது பள்ளியில் வேலை செய்யும் கமலுக்கு நைசாக ரூட்டும் போட்டதை காட்டிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

இருவருக்கும் படத்தில் ஒரு பாடல் கூட உண்டு. ‘சில்க்’ன் மன நிலையை கமலுக்கு சொல்லும் விதமாகத்தான் பாடல் வரிகள் இருந்தது. ‘பொன்மேனி உருகுதே” பாடல் தான் அது. படம் எப்படி ஹிட் ஆனதோ அதே போலே தான் இந்த பாடலும் மஜா ஹிட் ஆனது.
இந்த பாடல் எடுக்கப்படும் போது கடும் வெயிலில் ஷூட்டிங் நடந்ததாம். காலில் செருப்பு கூட அணியாமல் நடிக்க வேண்டியது இருந்ததாம். இப்படி சொல்ல முடியாத வலியோடு தான் நடித்தாராம் ‘சில்க்’.
கமலுக்கு கம்பெனி கொடுத்து ஆடுவது எனபது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அந்த கலையில் அவர் கற்று கைதேற்ந்தவர். இந்த பாடலில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஏன் சினிமாவிற்கு வந்தோம் எனகூட நினைத்தாராம் ‘சில்க்’ஸ்மிதா.