cinema news
ஆப்ரேட்டர்களை டயர்ட் ஆக்கிய பாடல்கள்…ஒன்ஸ்மோர் கேட்டு அடம் பிடித்த ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் குத்து பாடல்களுக்கு இன்றும் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தோன்றி ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் வரை இவர்களின் படங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு குத்து பாட்டாவது இருந்திருக்கும்.
எத்தனை ரகமான பாடல்கள் இருந்தாலும் இந்த குத்து பாட்டை கேட்பதே ஒரு தனி சுகம் தான். காரணம் தியட்டர்களில் தங்களது விருப்பம் போல ஆடித்தீர்த்து மகிழ்ச்சியடைய வைப்பது குத்து பாடல்கள் தான். அதோடு மட்டும் நிறுத்து விடமாட்டார்கள் மீண்டும் அந்த பாடல்களை போடச்சொல்லி ‘ஒன்ஸ்மோர்’ கேட்கும் பழக்கம் தற்போது வரை இருக்கிறது ரசிகர்களிடம் .
இப்படி ஆப்பரேட்டர்களுக்கு அதிகாமான வேலை கொடுக்க வைத்த பல பாடல்கள் இருக்கிறது. தீனா இசையில் ஷங்கர் மஹாதேவன், மாலதி பாடி தனுஷ், சாயாசிங் நடிப்பில் வெளியான “திருடா திருடி” படத்தில் வரும் ‘மன்மத ராசா’ பாடல் வெளிவந்த நேரத்தில் சக்கை போடு போட்டது. இவர்கள் இருவரின் நடனம் பெரிதாக பேசவும்பட்டது.
தியேட்டர்களில் அதிகாமாக ‘ஒன்ஸ்மோர்’ கேட்கவைத்த பாடல்களில் இந்த பாடல் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இதே போல எஸ்.பி.பாலசுப்ரமணியன், அனுராதா ஸ்ரீராம் விக்ரமிற்கு “ஜெமினி” படத்தில் பின்னனி பாடிய ‘ஓ போடு’ பாடலும் தான். இந்த பாட்டில் ஒரு இடத்தில் விக்ரம் தனது குரல் வளத்தை காட்டி பாடியிருப்பார்.
தேவா இசையில் பிரசாந்த் நடித்த “சாக்லேட்” படத்தின் சூப்பர் ஹிட் ஆனது மல மல மருதமலை பாட்டு. மும்தாஜ் ஆடிய ஆட்டத்திற்கு பரிசாக இந்த பாடலை “ஒன்ஸ்மோர்” கேட்டு,கேட்டு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ‘மல,மல,மல’ இந்த பாடலும் அதிகமாக தமிழ் சினிமாவில் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக அமைந்தது…