cinema news
அண்ணாவே சொல்லிட்டாரு அப்புறம் என்ன!… காதுகளை கிழித்த பிகில் சத்தம்… அப்படி என்ன அப்டேட்?…
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் விஜய். தென்னிந்தியாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நாயகர்களில் இவர் முக்கிய இடத்தை பிடித்திருகிறார். இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட். வசூல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டது. சமீபத்தில் கட்சி துவங்கிய விஜய், தனது சினிமா வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.
வெங்கட் பிரபுவுடன், விஜய் இணைந்துள்ள “கோட்” படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சித் தலைவர் விஜய், “ரம்ஜான்”தினமான இன்று அவரது ரசிகர்களுக்கும், “ரம்ஜான்” பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ வைத்திருக்கிறார்.
விஜய்யிடம் வாழ்த்து வந்த மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, “கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா” என்பது போல “கோட்” படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிடப்பட்டு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் தள்ளியுள்ளது படக்குழு.
விஜயும், அஜீத்தும் சமகால எதிரிகளாக திரையில் பார்க்கப்பட்டு வரும் நேரத்தில் அஜீத்தை வைத்து மெகா ஹிட் படம் கொடுத்த வெங்கட் பிரபு, விஜயை வைத்து எப்படி படம் எடுக்க போகிறார்? என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் “கோட்” படத்தைப் பற்றிய ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வரும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆனந்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
யுவன்சங்கர்ராஜா இசையில் ஆடியுள்ள ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ ஏப்ரல் 14 தேதி வெளியாகும், அதைப்போலவே முக்கியமான ஒரு அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டது. கோடைகால விடுமுறையை அல்லது விஜயின் பிறந்தநாளை குறி வைத்து இந்த படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜயின் ரசிகர்களை துள்ளிக்கொண்டாட வைத்துள்ளது.