cinema news
இவர் நடிச்சிருந்தா இன்னும் தூளா இருந்திருக்குமோ?… முத்து பாண்டியை அடையாளம் காட்டிய ரமணி!….
திரைக்கதையின் வேகத்தினால் படங்களை வெற்றிப்படமாக மாற்றி காட்டியவர் தரணி. இவரது படங்கள் வெளிவரப்போகிறது என்றாலே அது நிச்சயம் விருந்து படைக்கத்தான் போகிறது என முன்னரே முடிவு செய்துவிடுவார்கள் ரசிகர்கள்.
அது தொடர்ச்சியாக நிரூபிக்கபட்டதால் ரசிகர்களின் மோகம் தரணி படத்தின் மீது இருந்து கொண்டிருந்தது. ‘விஜய் – தரணி’ கூட்டணியில் உருவான படம் “கில்லி” . ரீ -ரிலீஸாகி இப்போதும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து “எதிரும் புதிரும்” என்ற ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர் தான் வி.சி. ரமணி. சினிமாவிற்காக தனது பெயரை தரணி என மாற்றிக் கொண்டார். படத்தின் வெற்றியை தொடர்ந்து “தூள்” படத்தை இயக்கினார்.
ஹீரோவாக முதலில் இந்த படத்தில் நடிக்க விஜயிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் விஜய் நடிக்க முடியாமல் போனதால் விக்ரம் நடித்திருக்கிறார்.
“தூள்”ல் நடிக்க முடியாமல் போனதை நினைத்து வருந்திய விஜய் எப்படியாவது தரணியுடன் ஒரு படத்திலாவது நடித்தே தீரவேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதத்தோடு இருந்திருக்கிறார். அதன் விளைவாக வெளிவந்தது தான் தெலுங்கு படமான ‘ஒக்கடூ’வின் ரீ-மேக்கான “கில்லி”.
அதே போல “கில்லி” படத்தின் வில்லன் பிரகாஷ் ராஜ் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கென ஒரு தனி மாஸை உண்டாக்கியது ‘மதுரை முத்துப்பாண்டி’ வேடம் தான். அதோடு படத்தில் அவர் சொன்ன ‘ஹாய் செல்லம்’ தான் இன்றும் அவரின் அடையாளமாக உள்ளது.