தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆகா, ஓஹோ என ரசிகர்களால் தலையில் தூக்கி வைக்கப்பட்டு, அதன் பின்னர் தொபீர் என கீழே போடப்பட்டு , சினிமாவை விட்டு காணாமல் போன கலைஞர்கள் பலரும் உண்டு.
அதில் சிலர் வேறு துறைக்கு சென்று தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற கிளம்பிவிட்டனர். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவனம் செலுத்தி சிலர் ‘ரிபீட்’ வந்து கொண்டிருக்கிறார்கள்.
‘மைக்’ என சொன்னவுடன் நம் மனதில் நினைவுக்கு வருவது மோகன் தான். ‘வெள்ளிவிழா நாயகன்’ என்று அழைக்கப்பட்டவர். ‘ஹரா’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் ரவுண்டு வந்துள்ளார். அதைப்போல விஜயின் “கோட்” படத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வந்ததுள்ளது.
இவரை போலவே தான் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கும் திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. நாளடைவில் சினிமாவை விட்டு காணமலே போனார். ரஜினி நடித்த “லால் சலாம்” படத்தின் மூலம் அவருக்கு கிடைத்து ‘ரீ-என்ட்ரி’.

அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான், இவரை மிஞ்ச இனி ஆளே கிடையாது , “காதல் இளவரசன்” என ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த பிரசாந்த் திடீரென எங்கே இருக்கிறார் என தமிழ் சினிமாக்காரர்களை தேட வைத்தார்.
இவரும் விஜய் “கோட்”படத்தின் மூலம் மீண்டும் வந்து விட்டார் நடிக்க. 25 ஆண்டுகளுக்கு முன்னால் பிரசாந்தின் சுறுசுறுப்பு எப்படி இருந்ததோ, அப்படி தான் இன்றும் இருப்பது போலவே “கோட்” பட பாடலில் நடனமாடியிருப்பார். படம் வெளிவந்த பிறகு தான் பிரசாந்த் இனி கதாநாயகனாக நடிப்பாரா? என்பது தெரியவரும்.