cinema news
வெற்றிமாறன் இவ்ளோ வயலன்டான ஆளா?… பாலு மகேந்திராவையே பயம் காட்டிய படம் அது!…
பாலுமகேந்திரா தமிழ் சினிமா கண்ட இயக்குனர்களில் மிக மிக முக்கியமானவர். ஒரு சினிமா படத்தை எப்படி எல்லாம் கையாலாம் என்கின்ற யுக்தியை தெரிந்தவர்.
அவரிடம் உதவ இயக்குனராக பனிபுரிந்தவர்கள் பலர் இன்று தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனர்களாக இருந்த வெள்ளித்திரையை வண்ண வண்ணமாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர்…
அவருடைய வழித்தோன்றல்களில் ஒருவர் வெற்றிமாறன். “ஆடுகளம்”, “பொல்லாதவன்” போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான அத்தியாயத்தை எழுதி வருகிறார்.
தனுஷின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இயக்குனர்களில் இவர் முக்கியமான ஒருவராகத்தான் பார்க்கப்படுகிறார். இவருடன் பனியாற்றியவரும் அவரது நெருங்கிய நன்பருமான நரேன் வெற்றி மாறன், பாலு மஹேந்திரா உறவு குறித்து பேசியுள்ளார்.
இருவரும் தகப்பன் மகன் போலத்தான் இருந்து வந்தார்களாம். பாலு மஹேந்திரனுடன் அடிக்கடி கோபித்து கொண்டு சென்றுவிடுவாராம் வெற்றி மாறன். ஆனால் ஒரு சில நாளிலேயே மனமாற்றம் கொண்டு மீண்டும் தனது குருநாதரை தேடி செல்வாராம்.
வெற்றிமாறன் இயக்கிய “பொல்லாதவன்” படத்தை பார்த்த பாலு மகேந்திராவோ, வெற்றிமாறனுக்குள்ளே இவ்வளவு வன்முறை இருந்ததா? என சொன்னாராம் . அது மட்டுமல்லாது தமிழ் திரை உலகிற்கு இயக்குனர் பாலா போல இன்னொருவர் கிடைத்து விட்டார் என பெருமையோடு சொல்லியிருந்திருக்கிறார்.
சேது, நந்தா, போன்ற படங்களை இயக்கிய பாலாவும், தங்க மீன்கள் பட ராம் ஆகியோரும் பாலு மஹேந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் தான். இப்படி பாலுமஹேந்திரா என்ற பட்டறையில் கூறுதீட்டப்பட்ட கத்திகள் தான் வெற்றி மாறன், பாலா, ராம் போன்றவர்கள்.