miskin naren
miskin naren

மிஷ்கினை மிரள வைத்த ஒரே கேள்வி!…ஜாம்பவானுக்கே பாடம் கற்றுக்கொடுத்த சின்னத்திரை நடிகர்?…

சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நரேன். இயக்குனர் வெற்றி மாறனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர். பாலுமஹேந்திராவின் அன்பை பெற்றவரும் கூட.  தனுஷ் நடித்த “ஆடுகளம்”படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்.

சொல்லி கொள்ளும்படியாக வேடங்களை ஏற்று தொடர்ந்து நடித்தும் வருகிறார். பிரபல தயாரிப்பாளரும், விமர்சகருமான ‘சித்ரா ‘லட்சுமணனுடனான பேட்டி ஒன்றில் அவர் தனது திரை வாழ்வில் நடந்த சில சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.

anjathae
anjathae

மிஷ்கின் இயக்கத்திகல் ‘சித்திரம் பேசுதடி’ நரேன், பிரசன்னா, அஜ்மல், பாண்டியராஜன் உட்பட பலர் நடித்த மிகப்பெரிய வெற்றித்திரைப்படமான “அஞ்சாதே”யில்  நடித்திருந்தார் ‘சின்னத்திரை புகழ்’ நரேன்.  இயக்குனருடன் நடந்த ஒரு சீரியஸான சம்பவம் குறித்து சொல்லியிருந்தார்.

தனது மகள் வில்லனால் கற்பழிக்கப்பட்டு லுங்கியில் சுற்றப்பட்டு சாலையில் வீசப்படும்  காட்சி படமாக்கப்பட்டதாம். தந்தையாக நடித்திருந்த இவர் தனது மகளின் அவல நிலையை பார்த்து அழுது கொண்டே அவரை நோக்கி செல்வது தான் காட்சி.

படப்பிடிப்பிடிப்பின் போது மகளை நோக்கி வேகமாக ஓடிச்சென்றிருக்கிறார் நரேன்.  ‘கட்’  சொல்லி நிறுத்திய மிஷ்கின்,  கொஞ்சம் மெதுவாக நடந்து செல்லுங்கள் என சொல்லியிருக்கிறார். அதற்கு நரேனோ மகள் இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது எல்லா தந்தை உணர்ச்சிபூர்வமாகத்தான் இருப்பார். மகளை பார்த்து பதறிப்போய் அவளருகில் உடனே சென்றுவிட வேண்டும் என நினைப்பார்.

இப்படிப்பட்ட உருக்கமான காட்சியில் நீங்கள் சொல்வது போல மெதுவாக சென்றால் அது சரி வராது. நான் நடித்தது தான் பொருந்தும் இந்த சூழ்நிலைக்கு மெதுவாக நடப்பது சரி வருமா? என கேள்வி கேட்டுள்ளார். நரேன் அவர் விருப்பப்படியே  நடித்திருக்குறார். முதலில் இதில் ஆர்வமில்லாமல் இருந்த மிஷ்கின் படம் வெளிவந்த பிறகு காட்சிக்கு  கிடைத்த வரவேற்பை  பார்த்துவிட்டு நரேனை பாராட்டினாராம்.