cinema news
கோயில் கட்டிய விஜய்!.. தாய் மீது இவ்வளவு பாசமா?…
“தளபதி” விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து அவருடைய சினிமா ‘கேரியர்’ பற்றிய பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளிவந்த நிலையில் இருக்கிறது. இப்படி இருக்கையில் “கோட்” பட படப்பிடிப்பு விரைவாக நடத்தப்பட்டும் வருகிறது.
அடுத்த படத்தினுடைய இயக்குனர், அதாவது அவரது கடைசி படமாக கூட இருக்கலாம் என நினைக்கப்பட்டு வரும் வேலையில், அந்த படத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிது. “ரம்ஜான்” பண்டிகைக்கு வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் விஜய்
இப்படி இருக்கையில் தன் தாய் மீது உள்ள பாசத்தை காட்டும் விதமாக சென்னை பாடி அருகே சாய்பாபா கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போய் நிற்கின்றனர் விஜயின் தாய் பாசத்தை கண்டு. சாய்பாபா கோவில் என்பதை விட , அது விஜய் கட்டிய கோயில், அதுவும் அவரது அம்மாவிற்காக கட்டிய கோயில் என்பதால் பக்தர்கள் கூட்டம், ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து குவியத்துவங்கியுள்ளது. அந்த இடமே திருவிழா போல காட்சி அளித்து வருகிறது.
\
இந்நிலையில் ‘யூடியூப்’ சேனல்களும் அங்கு படையெடுக்க துவங்கியுள்ளது. ராகவா லாரன்ஸ் அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. தரிசனம் முடித்து தனது நண்பன் கட்டிய கோவில் என சொல்லியிருக்கிறார். அங்கு பஜனை பாடல்களை ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.
லாரன்ஸ், விஜய் இருவரும் “திருமலை” படத்தில் “நான் இல்ல, நீ இல்ல, நாமுன்னு மாத்து” பாடலில் இணைந்து நடனமாடியிருந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து திரையில் தோன்றவில்லை. லாரன்ஸினுடைய இந்த திடீர் வருகை விஜயின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பிருக்குமா? என சந்தேகத்தை ஏற்படுத்துவது போலவும் உள்ளதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர். “ஸ்ரீ ராகவேந்திரர்” மீது கொண்டுள்ள அதிக பக்தியால் லாரன்ஸ் ஸ்ரீ ராகவேந்தருக்கு கோயில் கட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.