vijay rajini
vijay rajini

நானெல்லாம் அப்பவே அப்படி!…ரஜினியை பின்னுக்கு தள்ளி சம்பவம் செஞ்ச விஜய்…

“கோட்”படத்தை படத்தை பற்றி பேச்சுக்கள் ஓடுகிறதோ இல்லையோ, “கில்லி” ரீ-ரிலீசுக்கு பிறகு பூமிக்கடியில் இருக்கும் புதையலை தோண்டி எடுப்பது போல படம் குறித்து  தினசரி  தகவல்கள் வந்து வலைதளத்தை அதிரவைக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கிய “படையப்பா” மிகப்பெரிய வசூல் சதனையை செய்தது. ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’  தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய சாதனையையும் தன் வசம் வைத்திருந்தது.

கிட்டத்தட்ட  44 கோடி ரூபாய் வசூலை ஈட்டி ரஜினியின் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை புரிந்த படமாக இருந்தும் வந்தது. 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்து வெளியான “கில்லி” படத்திற்கு கிடைத்த வரவேற்பு விஜயை வேற லெவலுக்கு கொண்டுசென்றது.

vijay rajini
vijay rajini

ஆக்சன், த்ரில், நகைச்சுவை, என அனைத்தும் சரியாக அமைந்தது. பாட்டு, ஃபைட் சூப்பர் என பெருமை பேசுனார்கள் விஜயின் ரசிகர்கள். படம் வெளியான நேரத்தில். இது ஒரு பக்கம் இருக்க, கலக்சனோ கல்லா கட்டியது.

தமிழ் சினிமாவில் 50 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. அந்த நாட்களில் பாலிவுட் படங்கள் மட்டுமே 50 கோடி வசூலை வாங்கித்தரும் என்ற பேச்சுக்களையெல்லாம் பொய்யாக்கி காட்டியது விஜயின் “கில்லி”. அதோடு மட்டுமல்லாமல் “கில்லி”வெளியாகும் வரை “படையப்பா” தான் அதிக வசூல் குவித்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் “கில்லி” சல்லி, சல்லியாக நொறுக்கியது.

சுமார் 8 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக பேசப்பட்டு , 52 கோடி வசூலை வாரிக்குவித்து தயாரிப்பாளரை ஒய்யார நடை போட வைத்ததாக சொல்லப்பட்டது.

அதோடு  மட்டுமல்லாமல் விஜயின் திரைப்பயனத்தை மாற்றியமைத்த படமாகவும் அமைந்தது” கில்லி”.  இதன் ரீ-ரிலீசுக்கு கிடைத்த வசூலை ஒருவேளை “படையப்பா” ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் அதே போல இதுவும் பெறுமா? என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.