cinema news
இந்த ஏரியா அந்த ஏரியா எல்லாத்திலேயும் கில்லி தான் இப்பவும்?… ரெக்கார்டு வச்ச ரீ ரீலீஸ்!…
தமிழ் சினிமாவுக்கு யாராவது சூனியம் வைத்துவிட்டார்களான்னு சிந்திக்கிற மாதிரி தான் இப்போ இருந்துகொண்டு வருது நிலைமை.
நல்ல படங்களுக்கும், புதுப்படங்களுக்கும் திடீர்னு ஒரு பஞ்சம் வந்திருச்சா?, பெரிய நடிகர்களுடைய படங்கள் எல்லாம் பெயர் வச்சும், டீஸர்கள் வெளிவந்தும், டைட்டில் வைக்கப்பட்டும் இன்னும் படப்பிடிப்பிலேயே இருந்துகொண்டு வருவதனால், இந்த வருஷம் இதுவரை நாலு மாசத்துல ரிலீசான படங்கள் கம்மி.
இதையெல்லாத்தையும் தாண்டி வெளியே வந்த ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவுள்ள வரவேற்பும் வாங்கவில்லை ரசிகர்களிடமிருந்து…
இப்ப கொஞ்ச நாளா பழைய படங்களை “ரீ – ரிலீஸ்” பண்றது ஒரு ட்ரெண்ட் ஆகி வருகிறது. லிங்குசாமி, கார்த்திக்கை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் ஆன “பையா” படத்தினை ரீ-ரீலீஸ் செய்ய யோசிச்சிட்டு இருக்காங்கலாம்.
அனேகமா அஜித்குமாரோட பிறந்தநாள் மே ஒன்றாம் தேதியன்று “மங்காத்தா” ரிலீஸ் செய்யப்படலாம்னு ஒரு செய்தியும் வந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் பொழுது விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன “கில்லி” படம் உலகம் ஃபுல்லா ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இதுல ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படம் ரிலீஸ் ஆகும்பொழுது இருந்த அதே வரவேற்பும், உற்சாகமும் இப்பவும் இருக்குதாம்…
இந்த தகவலை சொன்ன ‘வலைப்பேச்சு’அந்தணன் விஜய்யுடைய இன்னொரு படமான “போக்கிரி”யும் இதே போல தான் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் “கில்லி”க்கு இருக்கிற கூட்டம், போக்கிரிக்கு இல்லையே ஏன் என கேள்வியும் எழுப்பியிருக்கிறார். ஒருவேளை சரியான் முறையில் விளம்பரம் செய்யாமல் போனதன் காரணமாகக்கூட இருக்கலாம் எனவும் பேசியுள்ளார்.