ஷங்கரின் அடுத்த படம் விஜய் சேதுபதியுடனா?

ஷங்கரின் அடுத்த படம் விஜய் சேதுபதியுடனா?

இயக்குனர் ஷங்கர் இந்தியன் முதல் பாகத்தை கடந்த 1996ல் இயக்கி மிகவும் வரவேற்பை பெற்றார். அதே போல் ஒரு பிரமாண்டத்தை சாதனையை நிகழ்த்தி காட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் இரண்டு வருடம் முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்பட்டது. முதலில் நிதி பிரச்சினையால் படம் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டது பின்பு ஒரு வழியாக ஆரம்பிக்கப்பட்ட படத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார்.

பின்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படி தொடர் பிரச்சினையை இப்படம் சந்தித்து வருவதால் இப்படம் ட்ராப் செய்யப்படுமோ என ரசிகர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை விட்டு ஷங்கர் விஜய் சேதுபதி மற்றும் கேஜிஎஃப் கதாநாயகனை வைத்து புதிய ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை வெளியில் கசியும் தகவல் மட்டுமே.