cinema news
வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளர் இவர் தானாமே!…வெளியாகப்போகும் அசத்தல் அப்டேட்…
விஜயின் “கோஸ்ட்” படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடையும் சூழலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவும் – சிவகார்த்திகேயனும் அடுத்த படத்தில் இணைய போவதும் உறுதியாகி விட்ட நிலையில் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறதாம்.
படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் துவக்கவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதாம். ஆனால் இந்த படத்தில் முதல் ஆளாக கமிட் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கியமான நபர் பற்றிய செய்தியை சொல்லியுள்ளார் ‘வலைப்பேச்சு’அந்தணன். படத்தின் இசையப்பாளர் தான் அந்த முதல் நபராம்.
வெங்கட்பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்பது உலகறிந்த உண்மைதான். இருந்தபோதிலும் இந்த படத்தில் முதல் ஆளாக அவரை புக் செய்து இருக்கிறார்களாம். இதற்கான காரணம் என்ன என்பது சில நாட்களுக்குள் வெளிவந்து விடும்.
இப்படி இருக்கும் போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பற்றி பேசிய சிவகார்த்திகேயன் ‘இவர் கதை இல்லாம கூட படம் எடுப்பார், ஆனால் இவர் தம்ப்ய் இல்லாம படம் எடுக்கமாட்டார்’ன்னு சொல்லியிருந்தார்.
அவர் சொன்னது போல வெங்கட் பிரபுவினுடைய எல்லா படங்களிலும் பிரேம்ஜி அமரன் நடித்துள்ளார். அதனால் சிவகார்த்திக்கேயன் படத்திலும் இவர் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.
இதுவரை சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படத்தில் பிரேம்ஜி நடிப்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. இசையப்பாளர் யுவன் தான் என உறுதி பட அடித்து சொல்லியிருக்கிறார் அந்தணன். இன்னும் சிறிது காலத்தில் படத்தில் யார் யாரெல்லாம் இணைய போகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்து விடும்.