gowtham ajith rajini
gowtham ajith rajini

அவர் மட்டும் தான் ஸ்பெஷல்!…மத்தவங்களை பத்தி எனக்கென்ன…பாரபட்சம் காட்டிய கௌதம் மேனன்?…

பொதுவாக புனைப்பெயர்களை கொண்டு நடிகர், நடிகைகள் அழைக்கப்படுவது வழக்கமே. சிவாஜி கனேசனை “நடிகர் திலகம்” என, எம்.ஜி.ஆரை “புரட்சி தலைவர்” என திரை பிரபலங்கள் மேடைகளிலோ, தொலைக்காட்சி பேட்டியின் போதோ பிறரை இப்படி பெருந்தன்மையோடு அழைப்பார்கள். இதிலிருந்து சற்று மாறுபட்டவராகவே கெளதம் மேனன் இருந்து வருகிறார்.

ஒரு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற போது கூட்டத்தில் இருந்த ஒருவர், இவரை பார்த்து அஜீத்குமாரை ரசிகர்கள் அழைக்கும் ‘தல’ என அவரை குறிப்பிட்டு ஒரு கேள்வியை கேட்க பதிலுக்கு கெளதமோ ‘தல’ன்னா யார் என கேட்டு உள்ளார். அஜீத்குமாரை வைத்து இவர் இயக்கிய “என்னை அறிந்தால்” இவரை மேலும் பிரபலப்படுத்திய படம். ஆனாலும் இவர் இப்படி கேட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

gowtham vijay
gowtham vijay

அதே போல ஒருமுறை ‘தலைவர்’ என ரஜினியை பற்றி ஒருவர் பேச அவரிடமும் ‘தலைவர்’னா யாரு என கேட்டு கதிகலங்கச்செய்தவர். ஆனால் ஒருவரிடம் மட்டும் இவர் இந்த விசயத்தில் வித்தியாசம் காட்டிவந்துள்ளார். இவரே இவரது வாயால் விஜயை ‘தளபதி’ என சொல்லியிருப்பார். ஏன் அவருக்கு மட்டும் இந்த சலுகை என பலருக்குள்ளேயும் குழப்பத்தை வரவழைத்தது இவர் அப்படி அழைத்தது.

சூர்யா, கமல்ஹாசன் , அஜீத் என முன்னனிகளை வைத்து படம் இயக்கி விட்டார். ஆனால் விஜயுடன் மட்டும் இதுவரை இணையவில்லை. இப்படி அழைத்தால் விஜயின் கவனத்திற்கு சென்றுவிடலாம் என நினைத்து அப்படி சொல்லியிருக்கலாம் என கலாய்த்தனர் நெட்டிசங்கள் இவரை அந்த நேரத்தில்.இந்த விஷயத்தில் ஏன் இந்த பாரபட்சம் எனவும் கேட்டிருந்தனர்.