cinema news
அதெல்லாம் இப்போ என்னால முடியாதுன்னு சொன்ன இளையராஜா!…அட்ஜஸ்ட் பண்ண சொன்ன பாக்யராஜ்?…
திரைக்கதை எழுதுவதில் சிறந்தவராக விளங்கியவர் பாக்யராஜ். தமிழ் சினிமாவினுடய தரத்தை இந்தியா முழுவதுமாக உயரச்செய்தவர்களில் இவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.
“முந்தானை முடிச்சு” இந்த படத்தினை பலரும் மறந்திருக்க முடியாது இன்று வரை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரே.ஒரு மேடையில் பேசும் போது குறிப்பிட்டு நகைச்சுவை செய்த படம் அது. இன்றும் மூருங்கைக்காய் என்றால் “முந்தானை முடிச்சு” படம் தான நினைவுக்கு வரும்.
படத்தின் பாடல் ஒன்றினை பாட இளையராஜா மறுத்த ஒரு சுவாரசிய சம்பவத்தை நகைச்சுவையாக பாக்யராஜ் ஒரு மேடையில் பேசும் போது சொல்லியிருந்தார். “விளக்கு வெச்ச நேரத்துல” பாடல் ஒலிப்பதிவின் போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த நேரத்தில் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தில் இருந்திருக்கிறார் இளையராஜா. பாடல் எழுதப்பட்டிருந்த தாளினை பாக்யராஜ் கொடுத்திருக்கிறார். அதனை படித்த இளையராஜா இதெல்லம் என்னால பாட முடியாது என சொல்லியிருக்கிறார்.
ஏன் என பாக்யராஜ் கேட்டதற்கு பாடல் வரிகள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. மாலை அணிந்துள்ளதால் பாடமாட்டேன் என சொன்னாராம். உங்க பக்திக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்ன்னு பாக்யராஜ் நகைச்சுவையோடு சொன்னாராம்.
ஒரு வழியாக பாடலை இளையராஜா பாடலை பாடிமுடித்துள்ளார். பாக்யராஜ் கொடுத்த வரிகளை பாடாமல் தன்னான்னனா, தரனான்னனா என சேர்த்துக்கொண்டாராம். திடீரென பாடலை பாட சொன்னதால் வரிகளை மறந்து விட்டேன் வேண்டுமானால் ரீ-டேக் செய்யலாம் என்றாராம் இளையராஜா.
பரவாயில்லை இதுவே இருக்கட்டும் என சொல்லிவிட்டார் பாக்யராஜ். திரையில் பார்க்கும் போது இளையராஜா பாடியிருந்தது கச்சிதமாக பொருந்தியதாம். இளையராஜா முதலில் பாட மறுத்த பாடல் “விளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான், மறைஞ்சி நின்னு பார்க்கையிலே தாகம் என்றான், நா கொடுக்க அவன் குடிக்க தேகம் சூடாச்சு” என்ற பாடல் தான் அது.