கடந்த மே மாதம் பெயர் வெளியிடப்பட்டு அதன் பிறகு படத்தை பற்றி எந்த தகவலும் இல்லாமல் கப்-சிப் என மௌனம் காத்து வருகிறது “விடாமுயற்சி”படக்குழு.
மகிழ்திருமேனியுடன் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போவதாக ஒரு பக்கம், படப்பிடிப்பு நடத்தபட்ட அஜர்பைஜான் நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலை காரணத்தினால் தள்ளிபோகிறது.
தயாரிப்பாளர் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என இப்படி வாயில் வடை சுடும் காரணங்கள் மட்டுமே தான் சொல்லப்படுகிறதே தவிர ‘அப்டேட்’ பற்றி கேட்டால் காதுக்குள்ளே வெறும் காத்து மட்டும் தான் வருது என அஜீத் ரசிகர்கள் வருத்தப்படும் நிலையைத்தான் கொடுத்து வருகிறதாம் ‘விடாமுயற்சி” படக்குழு.
இந்த கேப்பில் அஜீத்குமார், ஆத்விக் ரவிச்சந்திரன் இணையப்போகும் படத்தின் ‘அப்டேட்’ திடீரென வெளியிடப்பட்டது. “குட்,பேட்,அக்லி” என பெயர் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
தேவிஸ்ரீபிரசாத் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். “வீரம்” படத்திற்கு பிறகு அஜீத்துடன் இணைகிறார் இவர். கதாநாயகி யார்? என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

இதனை பற்றிய தகவலை சொல்லியுள்ளார் ‘வலைப்பேச்சு’அந்தணன். அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஸ்ரீலீலா, அஜீத் படத்தில் இணைய உள்ளதாக பேசியுள்ளார். “குண்டூர் காரம்” படத்தில் நடித்து டோலிவுட்டை கிறங்கடித்தவர்.
தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாநாயகிகளுடன் மட்டுமே ஜோடி சேர்வது என கொள்கை வைத்திருக்கும் அஜீத், தன்னை விட வயதில் மிகவும் இளையவரான ஸ்ரீலீலாவை எப்படி ஜோடியாக்குவார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கதாநாயகியாக நடிக்க போகிறாரா? அல்லது ரஜினியின் அடுத்த படத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கயிருப்பது போல வேறு ஏதும் கதாபாத்திரம் வழங்கப்படுமா? என குழப்பியும் விட்டிருக்கிறார் அஜீத் ரசிகர்களை அந்தணன்.