- Homepage
- cinema news
- சொக்க வைத்த அஜீத்…கிறங்கப்போன தேவயானி…ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிய காதல் கோட்டை?…
சொக்க வைத்த அஜீத்…கிறங்கப்போன தேவயானி…ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிய காதல் கோட்டை?…
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் திரையில் வலம் வந்து, கவர்ச்சி என்னும் ஆயுத்தை அதிகமாக கையில் எடுக்காமலேயே முன்னனி கதாநாயகியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் தேவயானி. தனது படங்களை அடித்து, புடித்தாவது உடனடியாக பார்த்து விட வேண்டும் என முன்டியடித்துக்கொண்டு ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைத்தவர் இவர்.
“நீ வருவாய் என”யில் நடித்த போது, படத்தின் இயக்குனர் ராஜகுமரன் மீது காதல் வயப்பட்டு, அவரையே திருமணம் செய்து கொண்டார் . சமீப காலமாக வெள்ளித்திரையில் திரையில் அதிகமாக தோன்றுவதில்லை.
\
முரளி, சரத்குமார், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னனி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றியை சினிமாவில் பார்த்தவர் இவர். “பஞ்ச தந்திரம்”, “தெனாலி” படங்களில் கமல்ஹாசானுடன் நடித்திருந்தார். விஜய்யுடன் இவர் நடித்த “ஃப்ரண்ட்ஸ்”, “நினைத்தேன் வந்தாய்” மெஹா ஹிட் ஆனது.
அஜீத்குமாரும், தேவயானியும் ஜோடியாக நடித்த “காதல் கோட்டை” சக்கை போடு போட்டு தியேட்டரை விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடித்து பல நாட்கள் ஓடியது. அஜீத்தோடு ரமேஷ் கண்ணா இயக்கத்தில் “தொடரும்” படத்திலும், தனது காதல் கணவர் ராஜகுமாரின் இயக்கிய “நீ வருவாய் என” படங்களிலும் நடித்திருக்கிறார்.
அஜீத்குமார் குறித்து பேசியிருந்த தேவயானி, அவரை முதல் முதலாக “கல்லூரி வாசல்” பட படப்பிடிப்பின் போது தான் பார்த்தாராம். சிறிது நேரத்திலேயே அஜீத் குமார், தேவயானியோடு ஆங்கிம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி, மாறி பேசியிருக்கிறார். இத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார் என ஆச்சரியம் ஏற்பட்டதோடும், அஜித்தை பார்த்ததும் அழகு பையன் என்றும் நினைத்தாராம் தேவயானி.