cinema news
ஏன் என்னை பிரிந்தாய்.. ஆதித்ய வர்மா பட பாடல் வீடியோ…
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்ய வர்மா திரைப்படத்திலிருந்து ‘ஏன் என்னை பிரிந்தாய்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக்கான ‘வர்மா’-வை இயக்கினார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் அப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், பாலா இயக்கிய விதம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால், வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் வர்மா மீண்டும் உருவானது.
அர்ஜூன் ரெட்டி படத்தின் இணை இயக்குனர் கிரிசய்யா இப்படத்தை இயக்கினார். கடந்த மார்ச் மாதம் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முடிவடைந்து படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஏன் என்னை பிரிந்தாய்’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.