ஒரு திரைப்படம் உருவாகுவதே படப்பிடிப்பு தளத்திலிருந்து தான், அங்கு ஒளிப்பதிவாகும் காட்சிகளே தொழில்நுட்பத்தின் வலிமை சேர்க்கப்பட்டு திரையில் பிரதிபலிக்கும்…
படப்பிடிப்பு பொது வழியில் நடக்கிறது என்றால் அங்கு மக்கள் கூட்டம் நிச்சயமாக அலைமோதும். அதுவும் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் விருப்ப கதாநாயகர்கள் நடித்தால் கேட்கவே வேண்டாம்.
படம் வெளிவருவது எப்படி ஒரு மாஸாக இருக்குமோ, அதைப்போல படப்பிடிப்பை காண்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள் ரசிகர்கள். ஆனால் சில திரைப்பட காட்சிகளில் ஏதாவது சூட்டிங் நடப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்..
“கண்ணா லட்டு தின்ன ஆசையா”வில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் படத்தின் கதாநாயகன் ஷூட்டிங் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போலவும், அங்கு இருக்கும் சிம்புவுடன் சென்று பேசுவது போல காட்சிகள் இருக்கும்.
ரஜினிகாந்த் நடித்த “குசேலன்” படத்தில் நட்பு குறித்து வெளிவந்த நயன்தாரா பங்குபெறும் ஒரு படப்பிடிப்பு நடத்தப்படும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். நயன்தாராவை பார்த்து படப்பிடிப்பைக்காண கூடியிருந்த மக்கள் வியப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அதே மாதிரி “பிதாமகன்” திரைப்படத்திலும் நடிகை சிம்ரன் பங்கேற்கும் படப்பிடிப்பில் சூர்யா சென்று அவரை சந்திப்பது மாதிரியான காட்சி இடம் பெற்றிருக்கும் ஒரு குத்துப்பாட்டும் இணைக்கப்பட்டு அந்த காட்சி நிறைவடையும்…
மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஒரு ஷூட்டிங்ல் இருக்கும் நேரத்தில் அங்க வரும் வெளிநாட்டவர்களை அழைத்து கொண்டு சூர்யா சந்தித்து பேசுவதும். அப்பொழுது விஜயகாந்த் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என சொல்லும் வசனமும் இடம் பெற்று இருக்கும்.