விஜய் பற்றி பேசியதை கட் செய்து விட்டார்கள் – டேனியல் பாலாஜி கோபம்

192

பிகில் பட ஆடியோ விழாவில் தான் பேசிய பலவற்றை சன் தொலைக்காட்சி நீக்கிவிட்டதாக அப்படத்தில் நடித்த டேனியல் பாலாஜி புகார் கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய், யோகிபாபு, நயன்தாரா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னயில் நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் சைடு வில்லனாக நடிகர் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். இவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு விஜயை பாராட்டி பல விஷயங்களை பேசினார்.

இந்நிலையில், விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சுபஸ்ரீ பற்றி விஜய் பேசியதையே சன் டிவி நீக்கிவிட்டதாக இன்று காலை செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  6வது வருடத்தை கொண்டாடும் அட்லி தம்பதியர்